எங்களை பற்றி

Jipmer – தமிழ் இணையதள பொருள்

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

(ஜிப்மர்)

எங்களைப் பற்றி:-

1. பொது தகவல்
2. இடம்
3. அமைப்பு
4. தரமும் பாதுகாப்பும்

முன்னுரை:-

ஜிப்மர் 1823-ஆம் ஆண்டு பிரஞ்சு அரசால் ‘எகோலே டி பாண்டிச்சேரி’ என்னும் பெயரில் நிறுவப்பெற்றது. பின்னர் பிரஞ்ச் அரசரிடமிருந்து இந்திய அரசுக்கு பாண்டிச்சேரி கைமாறிய பொழுது இம்மருத்துவக் கல்லூரி “தன்வந்திரி மருத்துவக் கல்லூரி” எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இது ஜவஹர்லால் மருத்துவ முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக உயர்த்தப்பட்டது.

பொது தகவல்

1. ஜிப்மரின் சரித்திரமும் வளர்ச்சியும்
2. தொலைநோக்கமும் பணியின் குறிக்கோளும்
3. எதிர்கால திட்டங்கள்
4. ஜிப்மரைப் பற்றிய தகவல்.

முன்னுரை

ஒரு மூன்றாம் நிலை சிறப்பு மருத்துவமனையை உள்ளடக்கிய ஜிப்மர் இந்திய அரசின் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் கீழ் தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் மூன்று முக்கிய செயல்பாடுகளாவன:-

- இளநிலை முதுநிலை மருத்துவ மருத்துவம் சான்ற மாணவர்களுக்கு தலைசிறந்த படிப்பும் பயிற்சியும் பகிர்தல்
- மருத்துவ ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்தல்
- தலைசிறந்த மருத்துவ சேவை அளித்தல்

ஜிப்மரின் சரித்திரமும் வளர்ச்சியும்

1823-ஆம் ஆண்டு பிரஞ்சு அரசால் நிறுவப்பெற்ற ‘எகோலே டி பாண்டிச்சேரி’ என்ற மருத்துவ கல்லூரியிலிருந்து உருப்பெற்றது இன்றைய ஜிப்மர். முன்னாள் உயர்நீதி மன்ற கட்டிடத்தில் (தற்போதைய சட்டசபை மாளிகை) 1956-ஆம் ஆண்டு பிரெஞ்ச் தூதரக அலுவலர் இம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி மாநிலம் பிரஞ்சு அரசிடமிருந்து இந்திய அரசுக்கும் கைமாறிய காலத்தில் இக்கல்லூரி தன்வந்திரி மருத்துவ கல்லூரி என சிறிது காலத்திற்கு அழைக்கப்பட்டது. பின்னர் ஜவஹர்லால் மருத்துவ முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தென்மண்டலத்தின் மருத்துவ முதுநிலை நிறுவனமாக இந்திய அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உயர்த்தப்பட்டது.1964-ஆம் ஆண்டு அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவரான இராதாகிரு~;ணன் ஜூலை 13-ஆம் தேதி இம் மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

புது தில்லியிலுள்ள யுஐஐஆளு மற்றும் சண்டிகரிலுள்ள Pபுஐஆநுசு ஆகிய மருத்துவ நிறுவனங்களுக்கு நிகராக ஜூலை 2008-இல் ஜிப்மர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன் பிரதிபலிப்பாக ஜிப்மருக்கு வழங்கப்படும் அதிக நிதியுதவியால் இந்நிறுவனம் பன்முக வளர்ச்சி பெற்றுள்ளது.
2008 அக்டோபர் 15-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் அந்நாள் மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சர் அன்புமணி இராமதாசும் உயர்சிறப்பு மருத்துவ கட்டடம் காய சிகிச்சை மையம் மற்றும் புதிய அரங்கத்தினை திறந்து வைத்து ஜிப்மரை தேசிய முக்கியத்துவமுள்ள மருத்துவ நிறுவனமாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.ஜிப்மரின் தற்போதைய இரண்டாம் விரிவாக்கத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஜிப்மர் கல்வி மையம் மாணவர் விடுதி வளாகம் மற்றும் பொதுநல மையம் முதலியன உருவாக்கப்பட்டுள்ளன.

தொலை நோக்கமும் பணி குறிக்கோளும்.

எங்கள் நோக்கம் : மருத்துவ படிப்பு மருத்துவ ஆராய்ச்சி பொது நலம் மற்றும் மருத்துவ சேவைகளில் புதுமைகளைப் புகுத்தி நாட்டின் நல அமைப்புகளில் முன்னோடியாகத் திகழ்வதே ஜிப்மரின் நோக்கம்.

எங்கள் பணி குறிக்கோள்:

- மருத்துவ கல்வி மற்றும் பயிற்சியில் புதுமை புகுத்தி மருத்துவ சேவையில் முன்னோடிகளாகவும் மருத்துவர்களை தொடர்ந்து கற்கும் மாணவர்களாகவும் உருவாக்குதல்

- அடிப்படை மருத்துவ விஞ்ஞானத்தில் ஆராய்ச்சியும் நோய் சார்ந்த மருத்துவ கண்டுபிடிப்புகள்

- சுயமாக சிந்திக்கும் இளைய மருத்துவர்கள் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிபடுத்த ஊக்குவித்தல்

- நோயாளி சார்ந்த பாதுகாப்பான ஆற்றல் மிக்க பொறுப்பான வெளிப்படையான நிறுவனமாக மாற்றம் பெறுதல்

- எல்லா முயற்சிகளிலும் முனைவுகளிலும் தரத்தையும் மதிப்பையும் முன்னிருத்தல்

- எம்போன்ற கொள்கை உடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து சேவை செய்தல்

- சமுதாய – பொருளாதார சமத்துவமின்மையினை அறிந்து சமூக நலத்தையும் பொதுமக்கள் நலவாழ்வையும் முதன்மையாக்குதல்.

ஆகிய கொள்கைகள் மூலம் நாட்டின் மருத்துவ சேவை அமைப்பில் கருணையும் நேர்மையும் மிகுந்த மருத்துவ தொழிலாளிகளை உருவாக்குவதும் தலைசிறந்த மருத்துவ சேவை அளிப்பதுமே எமது பணியின் குறிக்கோள்களாகும்.

எதிர்காலத் திட்டங்கள்

கல்வித் தொடர்பான திட்டங்கள்:-

12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஒரு பொது நலத்துறை கல்லூரியும் மருத்துவம் சான்ற பிற தொழிலாளர்களக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனமும் நிறுவ ஜிப்மர் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த பயிற்சி பெற்ற மருத்துவம் சான்ற தொழிலாளர்களை உருவாக்கி நாட்டின் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை செம்மையான முறையில் செயல்படுத்த இயலும்.தொற்றா நோய்களின் விகிதம் பெருகி வருவதால் அத்தைகைய நோய்களைப் பற்றிய ஆராய்ச்சி பயிற்சி மற்றும் சிகிச்சைக்கான மையம் அமைக்கத் திட்டம் இடப்பட்டுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் எண்ணிக்கையை உயர்த்துதல் பற்களின் நோய் சிகிச்சைக்கான கல்லூரி நிறுவுதல் மற்றும் மருந்தியல் கல்லூரி நிறுவுதல் ஆகிய திட்டங்கள் உள்ளன. மருத்துவ கல்வியில் புதுமைகளைப் புகுத்தி கல்வித் துறையில் முன்னோடியாகத் திகழ மருத்துவ தொழிற்கல்வி மற்றும் கல்வித்திட்ட சீர்திருத்த மையம் மற்றும் கணிணி கல்வி கைப்பேசி கல்வி தொலைதூரக் கல்வி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ சேவை தொடர்பான திட்டங்கள்:-

குழந்தைகள் இருதயவியல் குழந்தை நல இருதய அறுவை சிகிச்சை கருவறை சிசு மருத்துவம் மரபணுவியல் முதலான பல புதிய துறைகளினால் ஜிப்மர் வழங்கும் மருத்துவ சேவை மேலும் மெருகேறவுள்ளது. இதைத் தவிர உயரிய நரம்பு-நாளவியல் உயரிய குழந்தை நல மையம் தீவிர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் துறையின் வலி மற்றும் ஆறுதல் மருத்துவப் பிரிவு, பச்சிளங்குழந்தை மயக்கப் பிரிவு, நோய் எதிர்ப்பியல், சிறுநீரக லேசர் சிகிச்சை பிரிவு, எண்டோ-ய10ராலஜி பிரிவு எந்திர சிகிச்சை பிரிவு, கதர்வலை புகைப்பட சேவை, மார்பக சிகிச்சை, நாளவியல் அறுவை சிகிச்சை பிரிவு சிறுநீரக மருத்துவ மையம் நாளமில்லா சுரப்பி மருத்துவ மையம் முதலிய பல சிறப்பு பிரிவுகள் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படவுள்ளன.

மேலும் காயப்பட்டோர் கவனிப்பு சேவை மற்றும் தீப்புண் மையத்தை மேம்படுத்துதல் செயற்கை கரம் மையம் உயரிய புண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் லேசர் அழகு மையம் ஆகிய சுமார் 50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். மேலும் 20 கோடி ரூபாய் செலவில் கிராமப்புற சேவைகள் மேம்படுத்த ஜிப்மர் கிராமப்புற சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இறந்தவர்-கல்லீரல் மாற்று சிகிச்சை கண் மாற்று சிகிச்சை கண் வங்கி எலும்பு வங்கி உட்பட பல்வேறு உடல் உறுப்பு சேகரித்தல் மற்றும் மாற்றிப் பொருத்தல் மையம் இரத்தம் ஏற்றும் மருத்தவியல் துறை ஆகியன சுமார் 50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன.

தற்போதைய மண்டல புற்றுநோய் மையம் மேலும் ரூபாய் 30 கோடி செலவில் பல நவீன கருவிகள் புற்றுநோய் மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மனநோய் சிகிச்சை மையம் மற்றும் நுரையீரல் தொடர்பான உயர் சிறப்பு ஆய்வுக்கூடம் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். தற்போதைய ஆய்வுகூட சேவைகள் அனைத்தும் டீளுடு310 வசதியுடன் மேம்படுத்தப்படும்.

ஆராய்ச்சி தொடர்பான திட்டங்கள்:-

சுமார் 140 கோடி ரூபாய் செலவில் ஜிப்மர் தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிலையை வலுப்படுத்தவுள்ளது. நுண்கிருமி முதல் அணுவைப் பற்றி படித்தல் வரை பல புதிய பாடங்களையும் அறிமுகப்படுத்தி அணு அளவில் முன்னேற்றத்தைக் காண முனைகிறோம்.

மேலும் மரபணுவியல் ஸ்டெம் செல் மற்றும் இதர துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதில் முதலீடு செய்யப்படும். இத்தைகய ஆராய்ச்சினால் ஆய்வக அறிவியல் நோய் தீர்க்கும் மருத்துவமாக எளிதில் மாற்றி விடலாம் என்று நம்புகிறோம்.

மேலும் ரூபாய் 140 கோடி செலவில் ஜிப்மர் ஊழியர்களுக்குப் பல நலத்திட்டங்கள் மைய உணவகம் மருத்துவர் குடியிருப்பு இயக்குநர் மாளிகை பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் புதிய மின்சார துணைத்தளம் அமைத்தல் ஆகியனவும் அடுத்து 5 ஆண்டு திட்டத்தில் உள்ளன. பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் ஜிப்மர் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை மொத்தம் ரூபாய் 1005 கோடி.